Saturday 26 July 2014

2 august 2014 டைம்பாஸ் வார இதழ்


உள்ளே 

ஸ்பெஷல்                                  சினிமால் 

1.கானகத்தில் காணமல் போனவர்       1.சினிமால்!
2.செம் கலர்ஃபுல்!                                             2.மேரி சோப்ரா!
3.பழசு கண்ணா பழசு!                                     3.ஹீரோவா? ஆளைவிடு சாமி!
                                                                                  

போட்டோ கமெண்ட்             அரசியில் 

1.ஒரு சாம்பியன் உதயமாகிறாள்!          1.கேள்விக்கென்ன பதில்?

அப்பாடகர் 


ஸ்பெஷல்

அம்மா கேள்விகள்!


''அசத்தலான அம்மா கேரக்டர் இருக்கிறதா? கூப்பிடு சரண்யாவை'' என்கிற அளவுக்கு.. மேலும் ...

பெண்... ஆனால் பெண் இல்லை...


17 வயது வரை எனக்கு எந்த விஷயமும் புரியவில்லை. தோழிகள் நார்மலான பெண்களுக்கு வரும்.. மேலும் ...

ஹேய்... தொப்பி... தொப்பி!


சமீபகாலமாவே பாலிவுட் பிரபலங்கள் பல பேர் தொப்பித் தூக்கிப் பாறையாகவே மாறிக்கொண்டு.. மேலும் ...

செம் கலர்ஃபுல்!


மின்சாரம் இல்லாத சமயத்தில் உள்ளங்கையில் சிகப்பு விளக்கின் ஒளியைப் பாய்ச்சி கை.. மேலும் ...

Foreign சரக்கு

ஜெர்மனிக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் மரியோ கோட்சே இப்போது பாப்பரஸி நிருபர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார். இவர் காதலியுடன் ஓய்வைக் கொண்டாடும் கிளு கிளு படங்கள் ஜெர்மன்..
  

ஹைலைட்ஸ்

ஹீரோவா? ஆளைவிடு சாமி!

''1987-ல 'திருமதி ஒரு வெகுமதி’ படத்துல ஒரு சில சீன்கள்ல தலை காட்டி யிருப்பேன். அப்புறம் நடிக்கணும்னு ஆசைதான். எத்தனையோ இயக்குநர்கள் கிட்ட கேட்டுப் பார்த்துட்டேன். யாரும்..























கேள்விக்கென்ன பதில்?

கேள்விக்கென்ன பதில்?
எத்தனை முறைதான் நாமே பிரபலங்களைப் பேட்டி கண்டு கேள்விக் கணைகளைத் தொடுப்பது? ஒரு பிரபலத்துக்கு இன்னொரு பிரபலத்திடம் கேள்வி கேட்க ஏராளமானவை இருக்குமே.
'தி.மு.க தலைவர் கலைஞரிடம் நீங்கள் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்’ இதுதான் டாபிக் என்றதும், குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறார் முன்னாள் தி.மு.க எம்.பி-யும் இந்நாள் ஜெயலலிதா விசுவாசியுமான ஜே.கே.ரித்தீஷ். 'கேள்விதானே... கேட்டுடுவோம். ஆனா, அடுத்த வாரம் என்னுடைய கேள்விகளுக்கு கலைஞரோட பதிலையும் போட்டீங்கனா நல்லா இருக்கும்’ என்றபடி கேள்விகளை அடுக்கினார்.
 இலங்கையில் உள்ள தமிழர்கள் கொல்லப்படும்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசின் கூட்டணியில் இருந்துகொண்டு எதுவும் செய்யாமல், எல்லாம் முடிந்த பிறகு, 'டெசோ’ அமைப்பு உருவாக்கப்பட்டது தாங்கள் அறியாமல் செய்ததா? அரசியல் அனுபவத்தால் செய்ததா?’
 ஐந்துமுறை முதல்வராக இருந்ததை மறந்துவிட்டு காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளைப் பற்றி அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது தங்களது கட்சியின் ஆதாயத்திற்காகவா? தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவா?
 தமிழகத்தின் மின் பற்றாக்குறை பற்றி அறிக்கை விடும்போது, உங்களுக்கும் உங்கள் மகன் ஸ்டாலினுக்கும் மனச்சாட்சி கேள்வி கேட்கிறதா? இல்லையா?’
 'தாங்கள் ஆட்சியில் இருக்கும்போதுதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்கிற விஷயம் தங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?’
 'தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் அம்மாவின் மூன்று ஆண்டு பொற்கால ஆட்சி நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தி, கட்சிக்காரர்களையும் தமிழக மக்களையும் துன்புறுத்திக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன?’
 'கடந்த வார நாளிதழ் ஒன்றில் 'அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க-வைத் தோற்கடிப்போம்’ என்று கூறியிருப்பது, தங்களின் வலிமையா? இயலாமையா?’
 'தமிழக முதல்வர் அம்மாவின் சீரிய முயற்சியால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்காகத் தாங்கள் எந்த முயற்சியுமே எடுக்காமல், 'இது என் முயற்சியில் வந்தது’ என்று கூறுவதுதான் தங்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடா?’
 'திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 'ஸ்பெக்ட்ரம் ஊழல்’ வளர்ச்சியா வீழ்ச்சியா?’
 'தாங்கள் ஆட்சியில் இருந்தபோது கோவை குடிசை மாற்று வாரியக் கட்டடங்கள் இரண்டு பூமிக்குள் புதைந்தது உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க, தற்போது ஸ்டாலினை வைத்து மவுலிவாக்கம் கட்டட விபத்தை மையப்படுத்தி 'மலிவான’ பேரணி நடத்தியதன் நோக்கம்தான் என்ன?’
 ' 'கிளப்’களில் வேட்டிக்குத் தடை விதித்ததால் அது தமிழர்களின் பண்பாட்டை அவமதிக்கும் செயல் என்று கருதி, 'தடை விதிக்கும் கிளப்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்’ என்று கூறிய தமிழக முதல் வருக்கு, வேட்டி கட்டிய தமிழரான நீங்கள் நன்றி சொல்வீர்களா? மாட்டீர் களா?’
 கேள்விகளை முடித்தவர், மீண்டும் ஒருமுறை 'தம்பி... கலைஞரோட பதிலுக்காக நான் வெயிட் பண்றேன்’னு போட்டுக்கோங்க என்று முடித்துக்கொண்டார்!

Friday 25 July 2014

வைரல் ஃபீவர்

வைரல் ஃபீவர்
'ஜஸ்ட் மிஸ்’ இந்த வார்த்தையை எதுக்கு வேணாலும் பயன்படுத்தலாம். படியில் இருந்து தவறி விழறதுல இருந்து தப்பிச்சாலும் சரி, பஸ் மோத வந்து தப்பிச்சாலும் சரி இந்த 'ஜஸ்ட் மிஸ்’ விஷயங்கள் எதார்த்தமா வாழ்க்கையில் நடக்கும். இப்படித்தான் பார்சிலோனா விமானநிலையத்துல ஜஸ்ட் மிஸ்ல ஒரு மிகப் பெரிய விமான விபத்து தடுக்கப்பட்டிருக்கு. ஏர்போர்ட்ல அர்ஜென்டினாவோட விமானம் ரன்வேயில் போறது தெரியாம அந்த விமானத்துக்குப் பின்னாடி ரஷ்ய விமானத்தைத் தரையிறக்க முயற்சி பண்ணியிருக்காங்க. ரஷ்ய விமானி திடீர்னு சைடுலேர்ந்து வந்த அர்ஜென்டினா விமானத்தைப் பார்த்துட்டு டக்குனு பிளான் பண்ணி விமானத்தை மேலே கொண்டுபோய் மேலேயே கொஞ்ச நேரம் சுத்திட்டு அர்ஜென்டினா விமானம் கிளம்பினதுக்கு அப்புறம் தன்னோட விமானத்தை இறக்கி பல நூறு மக்களைக் காப்பாத்தியிருக்கார். இதை ஒருவர் வீடியோவா மொபைல்ல எடுத்து 'நியர் மிஸ்’ (UTair Aviation 767-300 NEAR MISS? GO AROUND at Barcelona-El Prat) ணு தலைப்பு போட்டு யூடியூப்ல இறக்கிவிட்டதுல இப்போ வரைக்கும் ரெண்டு கோடிக்கு மேற்பட்டோர் அதைப் பார்த்திருக்காங்க. சூப்பர்ஜி... சூப்பர்ஜி!
'ஜப்பான் ஸ்கூல் கேர்ள்ஸ் சேஸ்’ இந்த வீடியோ பாத்திருக்கீங்களா?
விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் இரண்டு பேர் என்ற விகிதத்தில் ஜப்பானின் அட்டமி தெருக்களில் ஒரு சேஸ் நடத்துவாங்க. ஓடுகிற இரண்டு பேரும் அதை தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் ரெக்கார்ட் செய்துகொண்டே இருப்பார்கள், தவிர அவர்களின் நண்பர்களும் இதை வீடியோவில் பதிவு செய்வார்கள். இதில் முக்கியமான விஷயம் அந்த ஓட்டத்தில் சில தந்திரங்களை உபயோகப்படுத்துவார்கள், அதாவது மாடியிலிருந்து மாடி தாவுவது, சுவரில் சரசரவென பைப்பைப் பிடித்து ஏறுவது, புகைக் குண்டை வெடிக்கவைத்து மாயமாவது, போகும் வழியில் முட்களைக் கொட்டி துரத்துபவரிடமிருந்து தப்புவது எனப் பல. சில விஷயங்கள் வீடியோ தந்திரங்கள்தான் என்றாலும் இந்த வீடியோவை ரசிக்கவைக்கிறது இரு மாணவிகளின் சாகசங்கள். வீடியோ வெளியாகி ஐந்து நாட்களிலேயே மூன்று கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கின்றார்கள் என்றால் வைரல் வைப்ரேஷன் எப்படி எனப் பார்த்துக்கொள்ளுங்கள்!லிங்க்: http://youtu.be/qHFr1_md3Ok
 
2006-ம் வருஷ சர்வதேசக் கால்பந்து போட்டிக்காக பாப் பாடகி ஷகிரா ஆடின 'வக்கா வக்கா’ பாட்டே இன்னும் மனசைவிட்டு, ஏன் பல பேரோட மொபைலை விட்டுகூட போகாத நிலையில, இப்போ இந்த 2014-ம் வருஷ 'திமிதிகி’ கால்பந்துக்காக இவங்க வெளியிட்ட 'லா லா லா’ங்கிற பாட்டை ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. ரிலீஸ் பண்ணாலும் பண்ணாங்க... சும்மா 23 கோடிக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை க்ளிக்கியிருக்காங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் இந்த சர்வதேசக் கால்பந்து போட்டி முடிவுக்கு வந்துச்சு. இந்தக் கால்பந்து போட்டிகளோட நிறைவு விழாவில் ஷகிரா அக்கா இந்த 'லா லா லா’வை ஸ்டேஜ்ல ஏறி இடுப்பை வெட்டி வெட்டி ஆடியிருக்காங்க. சிகப்பு கலர் கட் கவுன்ல அம்மணியோட அழகுலேயும், அம்சமான குரல்லேயும் மயங்கிப் போய் அந்த வீடியோவை ஒரே வாரத்துல இப்போ வரைக்கும் சுமார் ஒரு கோடி பேர்  பாத்துருக்காய்ங்க. வீடியோ வைரலாகி டாப் கியர்ல போய்ட்டு இருக்கு...ப்பா... என்ன பொண்ணுடா?