
'அஞ்சான்’ படத்தில் சூர்யா ஒரு பாடல் பாடியுள் ளார். உடன் பாடி இருப்பது ஆண்ட்ரியா. விஜயைத் தொடர்ந்து சூர்யாவுடனும் பாடியதில் ஆண்ட்ரியாவுக்கு செம குஷி. அவங்கதான் மேடம் குஷியாகணும்!

மலையாளப் பட உலகில் மூன்று தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த கமர்ஷியல் ஹிட் ஜோடியான மோகன்லால் - ராய் லட்சுமி (அதான் பாஸ்.... நம்ம லட்சுமி ராய்) அடுத்து இணையும் 'ராஜாதி ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் ஷாம்னா காசிம். இந்த ஷாம்னா காசிம் வேறு யாரும் இல்லை. பூர்ணாதான். பெயரை மாற்றி ஆட்டமா!

'சதுரங்க வேட்டை’ படத்தில் சொந்தக் குரலில் வசனம் பேசி நடித்த இஷாராவின் நடிப்பைப்போல குரலுக்கும் நல்ல வரவேற்பு. இனி செம வாய்ஸ்தான்!

ஃபேஸ்புக் கணக்கு தொடங்கிய சமந்தாவுக்கு மூன்றே ஆண்டுகளில் 58 லட்சம் ரசிகர்கள் லைக் செய்து உள்ளார்களாம். செம சந்தோஷத்தில் இருக்கிறார் சமந்தா. அதுக்கு ஒரு பார்ட்டியோ ஃபங்ஷனோ வெச்சுடலாம்ல!

'மைதிலி என்னை காதலி’ படத்தில் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு அதிரிபுதிரி ரவுண்டு வந்து நாகார்ஜுனாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். சினிமாவில் அல்ல, சீரியலில். விஷயம் வெளியே சொல்லப்படாமல் ரகசியமாக படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். அப்படியே சினிமாவுக்கும்!

எமி ஜாக்சன் மாடலிங் துறையிலும் கொடிகட்டிப் பறப்பவர். பாஸ் மாடல் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்காக இவர் கொடுத்த ஹாட்டான போட்டோக்களை, மும்பை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி சான்ஸ் பிடிக்கிறார். அதில் சில புகைப்படங்களைப் பார்த்த சக நடிகைகள் எல்லாம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். ஆத்தி!

தமிழ் சினிமா உலகை விட்டு விலகி இருந்த 'துள்ளுவதோ இளமை’ ஷெரின் நீ....ண்ட இடைவெளிக்குப் பிறகு 'நண்பேன்டா’ படத்தில் உதயநிதியை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறார். இது போதாதா? விளம்பரப்பட உலகைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இயக்கும் 'திகில்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகி ஆகிறார். துள்ளுதா இளமை?
0 comments:
Post a Comment