Thursday, 24 July 2014

சினிமால்

சினிமால்
'பிரியாணி’ படத்தில் அழகான பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடும் கார்த்தியை அலையவிடும் பாத்திரம், 'மான் கராத்தே’யில் பயந்த சுபாவமுள்ள சிவகார்த்திகேயனை அலறவைக்கும் கேரக்டர், 'அரண்மனை’ படத்தில், நள்ளிரவில் பேயைக் கண்டு அலறும் பயந்த சுபாவமுள்ள பெண் என்று வெரைட்டியான பாத்திரங்களில் நடித்து விருந்து படைக்கக் காத்திருக்கிறார் ஹன்சிகா.  பாத்திரம் பத்திரம்!
2013-ல் தெலுங்கில் தமன்னா, த்ரிஷா, ஹன்சிகா, காஜல் என டாப் ஹீரோயின்களை வீழ்த்தியவர் சமந்தா. அவரை எப்படியும் 2014-ல் வீழ்த்த ஒரு கோஷ்டியே கோலிவுட்டில் ரூம் போட்டு யோசிக்கிறது. ஆனாலும் சமந்தா அலை ஓயாது என்கிறது அவருடைய கால்ஷீட் டைரி. இன்னொரு பக்கம் ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி பற்றி, 'புதிய தொடக்கம்’ என்று ட்வீட்டியிருக்கிறார் சமந்தா. தோடா, இப்பவே அரசியலுமா கண்ணு!
தமன்னா இப்போ அக்ஷய்குமாருடன் 'என்டர்டெயின்மென்ட்’ படத்துக்காக கோவாவில், குறைந்த உடையில், பீச்சில் டூயட் பாடிவருகிறார். லிங்குசாமி நடிப்பில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்குதாம். அடடா மழைடா, அடைமழைடா!
சன்னி லியோன் நடித்த 'ஜாக்பாட்’ படத்தில் அவரும் சச்சின் ஜோஷியும் நடித்த 'ஃப்ரீயா வுடு மாமோய்’ காட்சிகளை மும்பை சென்சார் அதிகாரிகள் சகட்டு மேனிக்கு வெட்டித்தள்ளி, படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. இப்போ வெட்டப்பட்ட காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களைத் திக்குமுக்காட வைக்கப்போகிறதாம் 'ஜாக்பாட்’ யூனிட். என்னா ஒரு பொதுநலம்!
பிந்து மாதவி ஆசைப்பட்ட மாதிரியே ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். 'கலக்குற மாப்ளே’ படத்தில் இன்ஸ்பெக்டர் வேடமாம். 'அட்டகத்தி’ தினேஷ§டன், 'எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் ஆக்ஷன் மற்றும் கவர்ச்சி ரோலாம். நீ கலக்கு புள்ள!

0 comments:

Post a Comment