Friday, 25 July 2014

கொரியா டு கோடம்பாக்கம்!

கொரியா டு கோடம்பாக்கம்!
'எந்திரன்’ படம் கொரியன் சினிமாவில் டப் பண்ணப்பட்டு ஹிட். 'குக்கூ’ கூட விரைவில் கொரிய மொழி பேசப்போகிறது. கொரியாவுக்கும் கோடம்பாக்கத்துக்கும் சுரங்கப்பாதை போட்டது யாரு பாஸ்? வாங்க சின்னதா அலசுவோம்?

தமிழ்நாட்டைவிட மிகச் சிறிய நாடு தென் கொரியா. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும்தான். பாலாவின் 'சேது’வுக்குப் பிறகு எதார்த்த சினிமாவின் அலை அதிக அளவில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ரத்தமும் சதையுமாக படங்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் தமிழ் சினிமாவுக்கு உருவானது. அதற்கு முன்பே ரோப்பில் பறந்து பறந்து சண்டை போடுவதும் வாயில் கலர் தண்ணியை அதக்கிக் கொப்பளிப்பதுமாக இருந்தாலும் ரியலான சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். கொஞ்சம் ரியலான படங்களைத் தருவதில் கொரிய சினிமாக்கள் டாப் லிஸ்ட்டில் இருந்தன. 'ஓல்டு பாய்’ என்ற படம் தந்த அதிர்ச்சிதான் ஆரம்பப் புள்ளி. 2003-ல் ரிலீஸான அந்தப் படத்தின் டி.வி.டி-க்கள் அப்போது சர்ச்சைக்குரிய அந்தப் படத்தின் கான்செப்ட்டால் பாலிவுட் டைரக்டர்களின் கைகளுக்குக் கிடைத்தது. டி.வி.டி கடைகளில் செம சேல்ஸ். இன்றுவரை அதிக இந்தியர்களால் பார்க்கப்பட்ட கொரியன் சினிமா என அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். இதில் கிம் கி டுக் தனி ரகம். பின்னி எடுக்கும் அவரது படங்களின் டி.வி.டி-க்கள் மும்பையின் ஹாட் சேல்ஸ் லிஸ்ட்டில் உள்ளது. அதற்கு அடுத்து சீனாவின் இயக்குநர் வோங்கர் வாய் இயக்கத்தில் வந்த சில படங்களைப் பார்த்திருக்கிறார்கள்.  
பெரும்பாலும் கொரியப் படங்களின் ஆக்ஷன் காட்சிகளை ஹாலிவுட்டில்கூட பார்க்க முடியாது. ஒருவேளை பார்த்தாலும் அங்கிருந்து எளிதில் நம்மால் எடுக்கவும் முடியாது. கொரியப் படங்கள் இனிமா கொடுக்கும் வகையைச் சேர்ந்தவை.  
'குடலை உருவி மாலை போட்ருவேன்’, 'தோலை உறிச்சுத் தொங்கவிட்ருவேன்’, 'மாறு கை மாறு கால்’ எனச் சொல்வார்கள் தெரியுமா? இதை விஷ§வலாகக் காட்டிவிடுவார்கள் கொரியர்கள். 'ஐ சா தி டெவில்’, 'தி சேஸர்’, 'தி மேன் ஃப்ரம் நோ வேர்’ போன்ற படங்களில், மேலே சொன்ன மூன்றையும் பார்க்கலாம்.
இந்த வகைப் படங்களில் ரத்தம் மட்டும் அல்லாமல் அழகியலான சென்டிமென்ட் காட்சிகளையும் பார்க்க முடியும். இப்படி 'டூ இன் ஒன்’ டைப் படங்களின் டி.வி.டி-க்கள், நம் பர்மா பஜாரில் அதிகம் கிடைக்கின்றன. லேட்டஸ்ட்டாய் ஹிட்டடித்த 'யாமிருக்க பயமே’ படம் வந்த முதல் நாளே 'இது கொய்ட் ஃபேமிலினு கொரியன் படத்தோட காப்பி பாஸு’ என்றார்கள். கொட்டிக்கிடக்கும் கொரியப் படங்களை வெறித்தனமாகப் பார்ப்பவர்கள்தான் இப்போது புதுப் புரளியாய், 'ஜிகர்தண்டாவே டர்ட்டி கார்னிவல் என்ற படத்தின் காப்பிதான்’ என கொளுத்திப்போட, எல்லோரும் ஃபேஸ்புக்கில் கலாய்க்க, கொதித்துப்போனார் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ' இரண்டாவது படத்துக்கே காப்பி அடிக்கும் அளவுக்கு கற்பனை வற்றிப்போகவில்லை. படம் பார்த்துட்டுப் பேசுங்க’ என்றார் காட்டமாக. டிரெய்லர், டீஸர் ஸ்டைலில் இப்போதே கொரியப் படங்களை வாங்கிப் பார்க்க ஆரம்பத்திருக்கிறது ஒரு குரூப்.
இப்போது லேட்டஸ்ட்டாக 'கிம் யங்’ என்ற கொரிய இயக்குநர் இயக்கிய மெகா பட்ஜெட் படமான 'மிஸ்டர் கோ’ என்ற 3டி படம் அப்படியே தமிழில் டப் ஆகிறது. அதற்கான வேலையை அண்மையில் அந்தப் படத்தின் இயக்குநர் கோடம்பாக்கத்துக்கே வந்து முடித்துச் சென்றிருக்கிறார். படத்தின் ஹீரோவே கொரில்லாதான். (கொரியன் கொரில்லா... வாட் எ ரைமிங்!)
'இந்த விபரம் தெரியாம ஏழெட்டு கொரியன் டி.வி.டி வாங்கிக் கதை பண்ணிட்டேனப்பா’ என வடிவேலு ஸ்டைலில் இனிமே புலம்பாதீங்கப்பா.
புதுசா யோசிங்க... புதுசா வாங்க!

0 comments:

Post a Comment