திருட்டுப் பசங்க!
'சதுரங்க வேட்டை’ படத்தின் நாயகன் காந்தி பாபு கேரக்டர் போல நிஜத்திலும் உலகமெங்கும் பல சீட்டிங் சாம்பியன்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். தூசு நெடி அடிக்கும் அந்த வரலாறின் பக்கங்களைப் புரட்டுவோமா?
கூகுளில் போனி பார்க்கர் மற்றும் க்ளைடி பாரோ என டைப் செய்து பாருங்கள். அப்படியே ஷாக் ஆவீர்கள். 23 வயது பருவ மங்கை போனியும் 25 வயது அழகன் க்ளைடியும் சேர்ந்து கொடுத்திருக்கும் ரொமான்டிக் போஸ் அத்தனை அழகு. இருவரும் அமெரிக்கர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டி இருக்கிறார்கள். 30-களில் அமெரிக்க காவல் துறையே வலைவீசித் தேடிய புத்திசாலித் திருடர்கள் இவர்கள். டிபார்ட்மென்ட் ஸ்டோர் திருட்டு, கேஸ் ஸ்டேஷன் கொள்ளையில் ஆரம்பித்து, மிக நூதனமாக அமெரிக்காவின் பிஸியான வங்கிகளில் கொள்ளையடித் திருக்கிறார்கள். ஈவு இரக்கம் இல்லாத கொலை கொள்ளையையும் அரங்கேற்றி இருக்கிறார்கள். 'சதுரங்க வேட்டை’ படத்தில் வரும் 'நல்லவனா வாழ்ந்தா செத்த பிறகுதான் சொர்க்கத்துக்கு போலாம். கெட்டவனா வாழ்ந்தா வாழுறப்பவே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்’ என்ற ஃபேமஸ் டயலாக், இந்தத் தம்பதிகளுக்கு 100 சதவிகிதம் பொருந்தும். சின்னச்சின்னத் திருட்டுக்களை செய்துவந்த அவர்களுடைய நெட்வொர்க்கில் வான்ட்டடாக பல லோக்கல் தாதாக்கள் இணைய, அதன் பிறகு ஆபீஸ் போட்டுத் திருடி பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். பிக்பாக்கெட்டில் ஆரம்பித்து கொலைகள் வரை செய்ததால், மிகப் பெரிய கிரிமினல்களாக இன்று வரை அமெரிக்க போலீஸால் அறியப்படுகிறார்கள். சினிமா ஸ்டைலில் தங்களைப் பிடிக்கவரும் போலீஸ்காரர்களின் நெற்றிப்பொட்டில் சுடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் அவர்களது முடிவும் அதேபோல துப்பாக்கியால் நிகழ்ந்ததும் சினிமாவுக்கான விஷயமாக இருந்ததால், 'போனி அண்ட் க்ளைடி’ என்ற தலைப்பிலேயே 1967-லிலும், 2013-லிலும் இரண்டு முறை அவர்களது வாழ்க்கை சினிமாவாக வெளிவந்தது. சினிமா எடுக்க இன்னொரு காரணம்... அவர்கள் இறப்புக்குப் பின்தான் இந்தத் தம்பதியர் ரியல் லைஃப் ஜோடி அல்ல. டைவர்ஸான பிறகு இருவரும் 'புதுப்புது அர்த்தங்கள்’ ஸ்டைலில் வாழ்க்கையில் இணைந்ததும், கடைசி வரை இணைந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போட்டோ பாருங்க... எவ்ளோ அழகா இருக்குங்க பக்கிங்க!
பிங்க் பேந்தர்ஸ் குரூப். லண்டனைச் சேர்ந்த மிகப் பெரிய கொள்ளைக் கும்பல். 25 நாடுகளில் 56-
க்கும் மேலான வெவ்வேறு ஸ்டைலில் கொள்ளையடிப்பது இவர்களது பாலிசி. 1993-ல் மட்டுமே 40 கொள்ளைகளில் சக்சஸ்ஃபுல்லாக இறங்கி கடைசி வரை இதன் பெருந்தலைகள் யாரும் பிடிபடாமல் போனது இந்த டீமின் சாதனை. மொத்தம் 200 பேரைக்கொண்ட இந்த டீம் இதுவரை 1,000 மில்லியன் டாலருக்கும் மேலாக லவட்டி உள்ளது. இதன் லீடர் எனச் சொல்லப்பட்ட ட்ராகன் மைகிக், கடைசி வரை நான் அவன் இல்லை என சாதித்தார். 2005-ல் ஜெயிலில் இருந்து நூதனமாகத் தப்பித்து இன்று வரை சிக்கவில்லை என்பது தனிப்பெரும் கொடுமை. இவர்களது ஸ்டைலே தனி ரகம். உதாரணமாக ஃபிரான்ஸ் நாட்டின் பெய்ரிட்ஸ் நகரில் வைர நகைக் கடையில் கொள்ளையடித்ததை இன்று வரை எல்லோரும் வியந்து பேசுகிறார்கள். சிம்பிளாக இரண்டு பேர் பெயின்டர் உடையில் போய் கடையைச் சுற்றிலும் இருந்த பார்க் பெஞ்சுகளுக்கு எளிதில் காயாத பெயின்ட் அடித்துவிட்டு 'பெயின்ட் ஈரம். உட்காராதே’ என போர்டு வைத்தார்கள். அதில் சாவகாசமாக உட்கார வந்தவர்களின் ஆடைகளில் அவை ஒட்ட, அந்த பெஞ்ச் பக்கம் யாருமே வரவில்லை. அந்த கேப்பில் அங்கே டீமாக உட்கார்ந்து ப்ளூ பிரின்ட் ஸ்கெட்ச் போட்டு சாயங்காலம் கடையை சாத்துவதற்குள் அத்தனையும் ஆட்டையைப் போட்டனர்.
கில்லாடிங்க!
0 comments:
Post a Comment