Friday, 25 July 2014

ஹேய்... தொப்பி... தொப்பி!

ஹேய்... தொப்பி... தொப்பி!
சமீபகாலமாவே பாலிவுட் பிரபலங்கள் பல பேர் தொப்பித் தூக்கிப் பாறையாகவே மாறிக்கொண்டு வருகிறார்கள். அதுவும் சாதாரண தொப்பி இல்லை. சார்லி சாப்ளின் தொப்பி!
முதன்முதலாக 'ஸாவரியா’ படத்தில் ரன்பீர் கபூர் போட்டார். அதன்பின் அவருக்கு அந்தத் தொப்பி ராசியோ என்னமோ, எல்லா  விழாக்கள்லேயும் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டார்.
அடுத்து அமீர்கான், 'தூம்3’ படத்தில் சர்க்கஸ்காரனாக வந்து இந்த சார்லி சாப்ளின் தொப்பியை அணிந்திருந்தார். அதில் இருந்து பாரபட்சம் பார்க்காமல் மனுஷன் எங்கே போனாலும் போட்டுக்கிட்டு அலைகிறார். சமீபத்தில் கே.பாலசந்தரை சந்திச்சப்போகூட இந்த கேப் மேனியாவாதான் வந்தார் அமீர்கான்.
அக்ஷய்குமார் 'ஆக்ஷன் ரிப்ளே’ படத்தோட பிரிமியர் ஷோவில், கங்கனா ரணவத் ஒரு பாலிவுட் நிகழ்ச்சியில், கல்கி கோச்சலின் ஒரு ஷாப்பிங் மாலில், யூத் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்ட அலியா பட் 'சம்ஜவான்’ ஆடியோ லாஞ்சில், சல்மான் கான் 'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இப்படி தொப்பிப் பிரியர்களாக மாற ஆரம்பிச்சுட்டாங்க.
உங்க ஊர்ல தொப்பி மட்டும்தான். எங்க ஊர்ல தலயே இருக்கார்!


0 comments:

Post a Comment