Thursday, 24 July 2014

ஆஃப் த ரெக்கார்டு!



ஆஃப் த ரெக்கார்டு!
அந்த சீட்டாட்டப் படத்தில் சுமார் நடிகர் ஆறு நாட்கள் மட்டுமே கால்ஷீட் தந்து 11 காட்சிகளில்தான் வருகிறாராம். ஆனால் 'மீண்டும் மீண்டும் என் முகத்தையே விளம்பரங்களில் போட்டு ரசிகர்களை ஏமாற்றுவது நியாயமா?’ என்று தன் நண்பர்களிடம் வருத்தப்பட்டாராம்!
தான் இசையமைக்கும் படத்தின் ஆடியோ விழாவுக்குக் காலையிலேயே மப்போடு வந்த நடிகரைப் பார்த்து, 'கொடுமை’ என்று தலையில் அடித்துக்கொண்டார்கள் பத்திரிகையாளர்கள்!
தன்னிடம் ட்விட்டரில் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் விரல் நடிகர், நம்பர் நடிகை  பற்றியே கேட்பதால், கோபப்பட்ட சின்னப் பூ நடிகை ட்விட்டர் அக்கவுன்டையே குளோஸ் பண்ணிவிடலாம் என்று யோசிக்கிறாராம்!
ஆனை நாயகியை கருப்பு நடிகர் 'கெடாக்குட்டி’ என்று செல்லமாக அழைக்க, நாயகியோ கறுப்பு நாயகரை, 'என்னங்க உயர்ந்தவரே’ என்று அழைக்கிறாராம்!

0 comments:

Post a Comment