Thursday, 24 July 2014

ஆஃப் த ரெக்கார்டு!



ஆஃப் த ரெக்கார்டு!
னை நாயகி, தான் நடிக்கும் படத்தின் ஹீரோக்களின் அடுத்த படத்திலும் இடம்பிடித்துவிடுகிறார். 'என்ன அப்படி மந்திரம் போடுகிறார்’ என்று மற்ற நடிகைகள் வயிற்றெரிச்சலோடு டிஸ்கஷன் செய்கிறார்களாம்!
கடவுள் நடிகருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவந்த நம்பர் நடிகை, விடியற்காலை நான்கு மணிக்குத்தான் கிளம்பினாராம். வாட்ச்மேன் மூலம் விஷயம் வெளியே தெரிய, அவரை உடனடியாக வேலையில் இருந்து தூக்கிவிட்டாராம் நடிகர்!
பிளேபாய் இமேஜால் முன்பெல்லாம் சந்தோஷப்பட்ட அந்த நடிகர் இப்போது அதனாலேயே சில நல்ல பெண்களின் நட்பு கிடைக்காமல் போய்விடுவதால், ரூட்டை மாற்றிவிட்டாராம். அடக்கி வாசிக்க முடிவு எடுத்திருப்பதன் முதல்படியாய் நிருபர்களிடம் 'ப்ளீஸ்... பொண்ணுங்களைக் கோத்து எழுதிடாதீங்கண்ணே’ என்கிறாராம்!
பில்ட்-அப்போடு வாரிசை அறிமுகப்படுத்திய அப்பா கடுப்பில் இருக்கிறார். மகனுக்கு 'சார் போஸ்ட்!’ சொல்லக்கூடத் தயக்கமாம். அதனால் 'டாப் ஹீரோயினைத் தேடுறதாலதான் தாமதம்!’ எனக் காரணம் சொல்லிவிட்டு மகனுடன் தனிப் படை போட்டு ஆக்டிங் டிங்கரிங் பண்ணிக் கொண்டிருக்கிறார்!

0 comments:

Post a Comment