Thursday, 24 July 2014

ஃபாரின் சரக்கு

ஃபாரின் சரக்கு
ங்கிலத்தில் வெளிவந்த 'ட்விலைட்’ என்கிற டிராகுலாப் படங்களின் நாயகனான ராபர்ட் பேட்டின்சனுக்கும் நாயகி கிறிஸ்டன் ஸ்டூவர்ட்டுக்கும் காதல். பாப்பரஸி மீடியாக்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலன் ராபர்ட்டை, தன் தோழி தாம்ரா வீட்டில் ரகசியமாக சந்திப்பார் கிறிஸ்டன். தினமும் தாம்ரா வீட்டுக்குச் செல்வதால், தாம்ராவுக்கும் கிறிஸ்டனுக்கும் லெஸ்பியன் உறவு என்று மீடியாக்கள் புரளி கிளப்பிவிட, நொந்துபோனார் கிறிஸ்டன். இப்போதெல்லாம் 1,000 மைலுக்கு அப்பால் இடாகோ மாகாணத்தில்தான் காதலர்கள் சந்தித்துக்கொள்கிறார்களாம். சின்னஞ்சிறுகளை நிம்மதியா இருக்கவிடுங்கப்பா!
மெரிக்க டிவி பிரபலம் கிம் கர்தாஷியனின் தங்கையும் ஃபேஷன் டிசைனருமான கோலே கர்தாஷியன், பிரபல அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர் லாமெரை விவாகரத்து செய்த விஷயத்தை முறைப்படி மீடியாவிடம் அறிவித்தார். அவருடைய தம்பி ராப் கர்தாஷியன், ட்விட்டரில் அக்காவைக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் படத்துடன் ஆறுதலும் சொன்னார். ஆனால் அது எல்லாம் அன்று மாலை வரைதான். அன்று இரவே அமெரிக்க பேஸ்பால் வீரர் மாட் கெம்ப்புடன் கோலே கர்தாஷியன் டேட்டிங் போய்விட்டாராம். பக்கிகளா... அவ்ளோ சீக்கிரமா பிக்கப் பண்றாய்ங்களே!

0 comments:

Post a Comment