Thursday, 24 July 2014

வைரல் ஃபீவர்



வைரல் ஃபீவர்
ண்டனைச் சேர்ந்த ரெயூட்டர்ஸ் என்ற செய்தி இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தன் தளத்தில் பதிவான படங்களில் பெஸ்ட் படங்களை வெளியிடுகிறது. அதில் இந்த ஆண்டு இந்தப் படம் உலகம் முழுவதும் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. புகைப்படக்காரர் நாச்சோ டோஸ் எடுத்த இந்தப் புகைப்படம், பிரேசில் நாட்டில் சா பாலோ நகரில் எடுக்கப்பட்டது. வீட்டிலேயே தன் குடும்பத்தார் சூழ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய மானுவேலா என்ற பெண்மணியை, பிரசவ வலி எடுக்க ஆரம்பிப்பதற்கு முந்தைய குட்டித் தூக்கத்திலிருந்து தண்ணீர் தொட்டிக்குள் அழகான ஆண் குழந்தையைப் பிரசவித்தது வரை அற்புதமாகப் படம் எடுத்திருந்தார் அவருடைய கணவர். 'கணவர் ஆன்ட்ரூவின் கனிவைப் பாராட்டியே ஆக வேண்டும். கணவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ எனப் பெண்கள் உலகம் முழுவதும் பாராட்டித்தள்ளினார்கள். டாப் ஆங்கிளில் நேச்சுரல் லைட்டிங்கோடு எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களை ஹை ரெஸல்யூஷனில் வாங்க இப்போதே நாச்சோவிடம் முட்டி மோதுகிறார்களாம். இதில் ஹைலைட்டான விஷயம், தன் தம்பி பிறப்பதை ஆலிஸ் என்ற வாண்டு கொஞ்சமும் பதட்டப்படாமல் கை தட்டி ரசித்துப் பார்த்ததுதான். க்யூட் ஃபேமிலி!
மொராக்கோ நாட்டில் நடைபெறும் மராக்கச் திரைப்பட விழா உலகமெங்கும் நடைபெறும் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்று. இந்த ஆண்டு நடைபெற்ற மராக்கச் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இந்தியாவின் சார்பாக சிறப்பு ஜூரியாக பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் கலந்துகொண்டார். 'ஹாலிவுட் இயக்குநர் குவான்டின் டொரான்டினோவைவிட டைரக்டர் மார்ட்டின் ஸ்கார்சிசியை ரொம்பப் பிடிக்கும்’ என முன்பு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து படங்களைத் தேர்வுசெய்த நிமிடங்களை மகிழ்ச்சியுடன் புகைப்படமாக்கிக்கொண்டார் அனுராக். ஆனால் சமூக வலைதளங்களை விட்டு அனுராக் வெளியேறியதால், அந்தப் படம் வெளியே வரவில்லை.  அனுராக்கின் உதவி இயக்குநர் ஒருவரால் இப்போது இணையத்தில் இந்தப் படம் ஹாட். அனுராக் ராக்ஸ்!

0 comments:

Post a Comment