Thursday, 24 July 2014

வைரல் ஃபீவர்

வைரல் ஃபீவர்
மூன்றாவது கணவரின் மூலம் மூன்றாவது குழந்தைக்குத் த(ர)யாராகிவிட்டார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட். முதல் கணவர் ஜிம்முக்குப் பிறந்த குழந்தைக்கு மியா ஹனி என்றும் இரண்டாவது கணவர் சாம் மென்டிஸுக்குப் பிறந்த குழந்தைக்கு ஜோ அல்ஃபி என்றும் பெயர் வைத்தவர், இப்போது தன் ஆண் குழந்தைக்கு பியர் என்று பெயர் வைத்திருக்கிறார். ஏற்கெனவே மூன்றாவது கணவரின் பெயரே ராக் அண்ட் ரோல் என வித்தியாசமாய் இருக்கும். அதனால் பார்த்துப் பார்த்து 'பியர்’ என்று பெயர் வைத்ததாகச் சொல்கிறார் கேட். கணவரின் பெயரைச் சேர்த்துக் குழந்தையை அழைக்கப்போவது இல்லை என்கிறார். எப்பூடி!
ஆப்ஸ் உலகில் புரட்சி என்று வர்ணிக்கப்படுகிறது பெண்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 'லூலூ’ என்ற ஆப்ஸ். லவ், லைஃப்ஸ்டைல், செக்ஸ், ஹெல்த் என முழுக்க முழுக்கப் பெண்களுக்கென விஷயங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸ், பெண்கள் மத்தியில் செம ஹாட். ஆண்களுக்கான எட்டிப்பார்க்கும் வசதிகளும் இதில் உண்டு. கமென்ட் இடவோ பாலியல்ரீதியாகத் திட்டவோ அந்தப் பெண்கள் அனுமதித்தால் வாய்ப்பு உண்டு. தேவையற்ற மொக்கைகளுக்கு இதில் வாய்ப்புகள் மிகக் குறைவு என்கிறார்கள். ஃபேக் ஐ.டி போல பெண் அடையாளத்துடன் வந்தாலும் அடுத்தடுத்த ஃபில்டர் ஸோனில் கண்டுபிடிக்கும் வசதிகள் உண்டாம். தடை செய்யப்பட்டால், மீண்டும் உள்ளே வர முடியாதபடி பலத்த செக்யூரிட்டி ஏரியாவாம் இந்த லூலூ. அதேபோல 17 ப்ளஸ் பெண்களுக்கு மட்டுமேயான  பாலியல்ரீதியான கருத்துப் பரிமாற்றம், தங்களுக்குத் தெரிந்த ஆண் நண்பர்களை கலாய்த்தல் போன்ற வசதிகள் உண்டாம். எங்க ஏரியா உள்ள வராதே!
ரிலீஸ் ஆன ரெண்டே நாட்களில் 69.58 கோடி வசூலாகி அமீர்கானின் தொப்பியில் சிறகைச் சொருகியுள்ளது 'தூம்-3’. இந்த வருடத்தின் பம்பர் ஹிட்களான 'சென்னை எக்ஸ்பிரஸ்’, 'க்ரிஷ் 3’ போன்றவற்றைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. படத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்காகவும் காத்ரீனா கைஃப்பின் செக்ஸி டான்ஸுக்காகவும் தாராளமாகக் காசைக் கொடுக்கலாம்.

0 comments:

Post a Comment