சமந்தா, ட்விட்டரில் எழுதும் கருத்துகள் சர்ச்சையாகிவிடுகின்றன. டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பற்றி தெரிவித்த கருத்து, மகேஷ்பாபு நடித்து ரிலீஸ் ஆகவிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தின் போஸ்டர் பற்றி தெரிவித்த கருத்து என வரிசையாகச் சர்ச்சைகள் கிளம்ப, ட்விட்டர் அக்கவுன்டை குளோஸ் பண்ணிவிடலாமா என யோசிக்கிறாராம். சர்ச்சை சமந்தா!

'ஜில்லா’ படத்தில் விஜய் கேரக்டரின் பெயர் சக்தி. மோகன்லால் பெயர் சிவன். சிவனும் சக்தியும் இணைந்து பிரச்னைகளைத் தீர்ப்பதுதான் கதையாம். விஜய்க்கு போலீஸ் வேலை வாங்கித் தருகிறார் மோகன்லால். ஒரு கட்டத்தில் அவரே வருத்தப்படும் அளவுக்குச் சம்பவங்கள் நடக்கிறதாம். அப்புறம் ஆக்ஷன்தானே ப்ரோ!

'தூம்-3’ பட புரொமோவுக்கு சென்னை வந்த காத்ரினா கைஃப் 'எனக்கு விக்ரம் நடிப்பு பிடிக்கும், அவரது 'பிதாமகன்’ படத்தை ரசித்துப் பார்த்தேன்’ என்று சொல்ல, விக்ரம் சந்தோஷப்பட்டாராம். இன்னொரு தகவல்... 'ஐ’ படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிடப் போகிறார்கள். ஹை!

கலைப்புலி தாணு மகன் கலாபிரபு ஏற்கெனவே சாந்தனு நடிக்க, 'சக்கரகட்டி’ படத்தை இயக்கினார்.இப்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் 'இந்திரஜித்’ என்ற படத்தைத் துவக்குகிறார். இதிலேயாவது தீயா வேலை செய்யுங்க!

'என்னமோ நடக்குது’ பட இசை வெளியீட்டு விழா மேடையில், 'சூது கவ்வும்’ இயக்குநர் நலன் குமாரசாமி, 'எதிர்நீச்சல்’ இயக்குநர் துரை.செந்தில்குமார், 'ராஜா ராணி’ அட்லி, 'மூடர் கூடம்’ நவீன், 'விடியும் முன்’ கே.பாலாஜிகுமார் என ஐந்து பேரையும் கௌரவித்து பாலுமகேந்திரா, பாரதிராஜா கையால் ஷீல்டு தந்தார்கள். பாரதிராஜா பாராட்டிப் பேசும்போது, ''எல்லோரும் படம் நன்றாக எடுக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தேக்கு மரம், சந்தன மரம் போல் வளர வேண்டும். கள்ளிச் செடி போல் வளராதீர்கள்'' என அறிவுரை கூறினார். கேட்டுங்கங்க என் இனிய தமிழ் இயக்குநர்களே!

'ஜில்லா’வை அடுத்து சூரிக்கு 'மஞ்சப்பை’ படத்திலும் நல்ல வேடம். சூரி கைவசம் இப்போ 11 படங்கள். நல்லாவே வந்துட்டீங்களே!

மனிஷா யாதவ் நடித்த 'ஆதலால் காதல் செய்வீர்’ படம் தெலுங்கிலும் ஹிட். ஆந்திராவில் இந்தப் படத்தின் புரொமோவில் கலந்துகொண்ட அஞ்சலி, ''தமிழில் இந்தப் படத்தில் நடிக்க முதலில் என்னிடம் கேட்டார்கள். என்னால் நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான்'' என்று வருத்தப்பட்டுள்ளார். அஞ்சலி ஃபீல் ஆயிட்டாப்ல!
0 comments:
Post a Comment