சும்மா படிங்க பாஸ்!
சும்மா படிங்க பாஸ்!
'நாய்க்கு வேலை இல்லை... நிக்க நேரம் இல்லை’னு ஒரு சொலவடை சொல்வாங்க. இன்னும் ஊருக்குப் போனா, 'நான் ரொம்ப பிஸிடா மாப்ளே’னு ஒரு நண்பன் பைக்கில் திரிவான். ஆனா, அவன் எந்த வேலைக்கும் போக மாட்டான். அவனைப்போல உங்களுக்கும் நண்பர்கள் இருக்கக்கூடும்.
ஊர்ல அவிய்ங்க வி.ஐ.பி-யா இருப்பாய்ங்க. அதாவது வேலையில்லா பட்டதாரியா. உண்மையில் டிகிரிகூட கம்ப்ளீட் பண்ணி இருக்க மாட்டானுங்க. ஆனா, செம ராயலா திரிவானுங்க. பெரும்பாலும் கூலர்ஸ், கோல்டு வாட்ச், பேட்டா ஷூவோட வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை நிச்சயமா போட்ருப்பானுங்க.
அவனுங்க வீட்டுக்குப் போனா, அவங்க அம்மாவோட உட்கார்ந்து டி.வி-யில நாடகம் பார்த்துட்டு இருப்பானுங்க. அல்லது, 'தம்பி மத்தியானம் லேசா கண்ணயரும்பா... ரூம்ல தூங்குது. எழுப்பவா?’னு கனிவோட கேட்பாங்க அவனோட பேரன்ட்ஸ். அவங்க கருணையை நினைச்சு, நமக்குக் கண்ணீர் வந்துடும். இதாச்சும் பரவாயில்லை. குடும்பமா உட்கார்ந்து நாடகத்தை டிஸ்கஸ் பண்ணுவாய்ங்க பாருங்க. இதெல்லாம் என்ன டிஸைனோ?
நடந்தே ஊரை அளந்தவன் அடுத்தவாட்டி ஊருக்குப் போறப்போ, 'மை டாட்ஸ் கிஃப்ட்’னு பல்சர்ல போவான். 'எங்கேடா இவ்ளோ வேகமா போறே?’னு கேட்டா, 'அம்மா கடுகு, உளுந்து வாங்கிட்டு வரச் சொன்னுச்சுடா’னு பிஸியா பறப்பான். பஞ்சர் ஆயிடும்டி மாப்ளேனு வேண்டிக்குவோம்.
நம்ம செல்போனை அவிய்ங்க பார்த்தாப்போச்சு. ''இதெல்லாமா இன்னமும் வெச்சிருக்கே? இது பழைய மாடல்டா மச்சான்’னு குத்திக்காட்டிட்டு ஐபோனுக்கு அத்தாச்சி மாதிரி இருக்கிற ஒரு போனை எடுத்து காதுக்கு வெச்சு, 'மாமோய்... நாளைக்குக் கள்ளு குடிக்கிறோம். ஊர்ல இருந்து என் ஃப்ரெண்ட் வந்திருக்காப்ல’னு உபசரிப்பு ஏரியாவுக்குப் போயிடுவானுங்க. அடுத்தவாட்டி அவன் டேப்லெட் வாங்கி உங்களைக் கடுப்பேத்துறதுக்குள்ள அட்லீஸ்ட் நல்ல மாடல் ஆண்ட்ராய்டு போனையாச்சும் வாங்கிட்டுப் போங்க ஜி.
ஒவ்வொரு முறையும் ஹேர் ஸ்டைல் மாத்துவானுங்க. நீங்க சென்னை சிட்டியின் உப்புத்தண்ணி, பொல்யூஷன் எல்லாவற்றிலும் உங்களோட ஹேரையே பறிகொடுத்து நிக்கிறப்போ, ஹேர் ஸ்டைலுக்கு எங்கே போவீங்க? லேட்டஸ்ட்டா ஊருக்குப் போனப்போ, 'அந்தப் பயபுள்ள யாரோ மெஸ்ஸியாமே... ஃபுட்பால் எல்லாம் வெளாடுவாராமே? அந்த ஆளோட ஹேர் ஸ்டைலை வெச்சிருக்கு’ம்பாய்ங்க. ஆனா நமக்கென்னமோ புலிக்குட்டியோட பிரதர் பூனைக்குட்டிதான் ஞாபகத்துக்கு வரும்.
'மாப்ளே... எங்கம்மா மட்டன் எடுத்திருக்கு. வந்துடு’னு அசால்ட்டா சொல்வான். 'தம்பி பருப்புக் கடைஞ்சு ரசம் வெச்சிருக்கேன்... சாப்பிட்டுப் போறியா?’னு எங்கம்மா சொல்லும். ஆனந்தக்கண்ணீரோட பருப்பு சாப்பிட வேண்டியதுதான்.
'கல்யாணம் பண்ணிக்கடா’னு சும்மா பேச்சுக்கு சொல்வோம். அடுத்த மாசமே 'கல்யாணம்டா மாப்ளே... மெட்ராஸுக்கு வர முடியல... வீட்டுல போய் வெச்சிட்டேன். குடும்பத்தோட வந்திடு’னு சொல்வான். கல்யாணத்துக்குப் போனா செம கிராண்டா ஃபங்ஷன் நடக்கும். 'இவனுக்கெல்லாம் பொண்ணு யாருடா கொடுத்தா?’னு ஆச்சர்யமா பார்த்தா, பொண்ணு வேற அநியாயத்துக்கு அழகா இருந்து தொலைக்கும். ம்ம்ம்... நல்லா இரு தங்கச்சி!
0 comments:
Post a Comment