Friday, 25 July 2014

கட்டுரைக்கு நக்கல் அழகு!

கட்டுரைக்கு நக்கல் அழகு!
'டைம்பாஸில் என்னென்னமோ வருது. ஏன் அழகுக் குறிப்புகள் மட்டும் வருவதில்லை?’ என்று ஆண்டிப்பட்டியில் இருந்து அழகுசுந்தரம் கேட்டிருந்தார். இதோ சில பியூட்டி டிப்ஸ் :
 மூஞ்சியிலே பருவா? பரு சைஸுக்கு ஏத்த மாதிரி எமர் சீட் வைத்து மென்மையாகத் தேய்க்கவும். இப்படியே ஒருவாரம் தேய்த்து வந்தால் தோல் கையோடு வந்துவிடும். முகமே வெளிறிப்போன கலர்ல இருக்கிறதால ஒரு வெள்ளைத்தாளைப் பக்கத்தில் வெச்சீங்கனா உங்கள் முகமே வெண்மையா மாறி இருக்கிறது அழகா தெரியும். அப்புறம் பருவ வயசு கடந்தாலும் பருவே வராது பாஸ்.
 பற்கள்ல கறை இருக்கா? கவலையே வேண்டாம். உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு, புளி, மிளகா இருக்கணும்னு அவசியம் இல்லை. ஜஸ்ட் 50 மி.லி பெயின்ட் டப்பா இருந்தா போதும். சின்னதா ஒரு ப்ரெஷ் இருந்தால் நல்லது. 'ஈஈஈஈ’ காட்டிட்டு நீங்களே அடிச்சுக்கலாம். நாக்குல படுதேனு கவலையா? கொஞ்சம் நாக்கைப் புடுங்கி ஓரமா வெளில வெச்சுட்டு அப்புறமா பல்லு காய்ஞ்சவுடனே மாட்டிக்கலாம்.
 சிகரெட்டை மறக்க முடியலையா? ரொம்ப சிம்பிள். ஒரு சிகரெட்டை வாங்கி அதில் இருக்கிற புகையிலையை உதிர்த்துவிட்டு, அதுக்குப் பதிலா லட்சுமி வெடியில இருக்கிற மருந்தை நிரப்பி வெச்சுக்கலாம். (லட்சுமி வெடி இல்லைனா யானை வெடி, குருவி வெடி... கொஞ்சம் வசதி இருந்தா நாட்டு வெடிகுண்டு மருந்தும் வெச்சுக்கலாம்.) தனியா ஒரு தம்மை அடிச்சா அதுக்கப்புறம் அந்த நெனைப்பே வராது. இந்த மருந்தை சிகரெட் பிடிக்கிறவய்ங்களுக்குத் தெரியாமலும் கொடுக்கலாம்.  
 கண்ணைச் சுற்றி கருவளையம் இருந்தா கவலையே வேண்டாம். வளையத்தைச் சுற்றி சாக்பீஸால வட்டம் போடுங்க. சிலபேர் வலது கண்ணுக்கு முதல்ல போடணும்னு சொல்வாங்க. அது ரொம்ப தப்பு. ரெண்டு கையிலேயும் சாக்பீஸ் வெச்சு 'சிவாஜி’ படத்து ரஜினி மாதிரி ஒரே நேரத்துல வளையம் போட்டா நல்லது. ஏன்னா ஒரு கண்ணுல நீர் வழிஞ்சா இன்னொரு கண்ணுலேயும் வழியும் இல்லையா?
 ஒரு கால்ல ஆணினா கவலையே வேணாம். இன்னொரு கால்ல ஆணி அடிச்சுக்கோங்க. ரெண்டுக்கும் நடுவுல கயித்தைக் கட்டி துணி காயப்போட்டுக்கோங்கோ. மேட்டர் சிம்பிள்.
 ஆயில் ஃபேஸ்... அதாவது எண்ணெய் வடியும் முகம்னு ஓவரா கவலைப்படுறீங்களா? ஒரு குரூப்பா சேர்ந்து வடியுற எண்ணெயை வடிகட்டி பிடிச்சு வெச்சு தீபாவளிக்கு வடை சுட யூஸ் பண்ணிக்கலாம். கார்த்திகை தீபத்துக்கு திரி போட்டு தீபம் கொளுத்தலாம். மிச்சம் இருந்தா மிச்சர் செய்யலாம்.
 முடி கொட்டுதா? கொட்டுன முடியை ஒவ்வொண்ணா பொறுக்கி எடுத்து குப்பையில போட்டுட்டு எங்கிட்ட வாங்க. உட்கார்ந்து அழலாம். ஒய் ப்ளட்? ச்ச்ச்... ஸேம் ப்ளட்.

0 comments:

Post a Comment