Friday, 25 July 2014

பெண்... ஆனால் பெண் இல்லை...

பெண்... ஆனால் பெண் இல்லை...
ஜாக்யுலின் பெக்... ஃபேஸ்புக்கில் இந்தப் பெண்தான் ஹாட் டாப்பிக்.  இந்த இங்கிலாந்து அழகிக்கு நாம் நினைக்கவே முடியாத வினோதப் பிரச்னை.
19 வயது ஜாக்யூவுக்கு அரிதினும் அரிதான எம்.ஆர்.கே.ஹெச் சிண்ட்ரோம் (Mayer-Rokitansky-Kuster-Hauser Syndrome) என்ற குறைபாடு இருக்கிறது. சுருக்க மாகச் சொன்னால், பெண்களுக்கான உறுப்புகள் இல்லாமல் பெண்ணாக இருப்பது.
''17 வயது வரை எனக்கு எந்த விஷயமும் புரியவில்லை. தோழிகள் நார்மலான பெண்களுக்கு வரும் மாதவிடாய் போன்ற பிரச்னைகளைப் பற்றிப் பேசும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு பாய்ஃப்ரெண்ட் யாரும் இல்லை என்பதால், இந்தக் குறை இருப்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்படவில்லை. எதேச்சையாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தபோது இந்த விஷயம் தெரியவந்தது. இதை நான் சமூக வலைதளத்தில் ஓப்பனாக எழுதியபோது இந்தக் குறைபாட்டுக்கு நானே காரணம் என்பதுபோல தாறுமாறாக என்னை விமர்சிக்க ஆரம்பித்தார்கள். வாழ்க்கையில் முதல்முறை நீண்ட நேரம் அழுதேன். குடும்பம் எனக்கு ஆறுதலாக இருந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த உடற் பரிசோதனையில் நார்மலான பெண்களுக்கு இருக்கக்கூடிய பெண் உறுப்பு, கருப்பை, சினைப்பை போன்றவை எதுவும் என்னிடத்தில் இல்லை என்பது தெரிய வந்தது. மற்றபடி பெண்ணுக்கான புறத்தோற்றத்திலும் மனதளவிலும் மாற்றம் இல்லாததால், நான் கவலைப்பட வில்லை.
வாழ்க்கையை சந்தோஷமாக வாழ என்னை நான் மாற்றிக்கொண்டேன். இப்போது மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறேன். நிறையத் தன்னம்பிக்கையோடு உலகை எதிர்கொள்கிறேன். முன்பு கேலி பேசியவர்கள், இப்போது ஸாரி கேட்கிறார்கள். பாலுணர்வு என்ற விஷயத்தை நான் உணர்ந்தது இல்லை. நிச்சயம் அது அற்புதமான விஷயமாக இருக்கும் என நம்புகிறேன். எதிர்காலத்தில் ஆபரேஷன் மூலம் பெண் உறுப்பினைப் பெற்று எல்லோரையும்போல வாழ ஆசை. என்னைப் புரிந்துகொண்ட தோழனை மணந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.
இங்கிலாந்து யூத்துகள் இப்போதே ஃபேஸ்புக்கில் லவ் அப்ளிகேஷன் போட்டுக் காத்திருக்கிறார்கள்.  

0 comments:

Post a Comment