வைரல் ஃபீவர்
'ஜஸ்ட் மிஸ்’ இந்த வார்த்தையை எதுக்கு வேணாலும் பயன்படுத்தலாம். படியில் இருந்து தவறி விழறதுல இருந்து தப்பிச்சாலும் சரி, பஸ் மோத வந்து தப்பிச்சாலும் சரி இந்த 'ஜஸ்ட் மிஸ்’ விஷயங்கள் எதார்த்தமா வாழ்க்கையில் நடக்கும். இப்படித்தான் பார்சிலோனா விமானநிலையத்துல ஜஸ்ட் மிஸ்ல ஒரு மிகப் பெரிய விமான விபத்து தடுக்கப்பட்டிருக்கு. ஏர்போர்ட்ல அர்ஜென்டினாவோட விமானம் ரன்வேயில் போறது தெரியாம அந்த விமானத்துக்குப் பின்னாடி ரஷ்ய விமானத்தைத் தரையிறக்க முயற்சி பண்ணியிருக்காங்க. ரஷ்ய விமானி திடீர்னு சைடுலேர்ந்து வந்த அர்ஜென்டினா விமானத்தைப் பார்த்துட்டு டக்குனு பிளான் பண்ணி விமானத்தை மேலே கொண்டுபோய் மேலேயே கொஞ்ச நேரம் சுத்திட்டு அர்ஜென்டினா விமானம் கிளம்பினதுக்கு அப்புறம் தன்னோட விமானத்தை இறக்கி பல நூறு மக்களைக் காப்பாத்தியிருக்கார். இதை ஒருவர் வீடியோவா மொபைல்ல எடுத்து 'நியர் மிஸ்’ (UTair Aviation 767-300 NEAR MISS? GO AROUND at Barcelona-El Prat) ணு தலைப்பு போட்டு யூடியூப்ல இறக்கிவிட்டதுல இப்போ வரைக்கும் ரெண்டு கோடிக்கு மேற்பட்டோர் அதைப் பார்த்திருக்காங்க. சூப்பர்ஜி... சூப்பர்ஜி!
'ஜப்பான் ஸ்கூல் கேர்ள்ஸ் சேஸ்’ இந்த வீடியோ பாத்திருக்கீங்களா?
விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் இரண்டு பேர் என்ற விகிதத்தில் ஜப்பானின் அட்டமி தெருக்களில் ஒரு சேஸ் நடத்துவாங்க. ஓடுகிற இரண்டு பேரும் அதை தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் ரெக்கார்ட் செய்துகொண்டே இருப்பார்கள், தவிர அவர்களின் நண்பர்களும் இதை வீடியோவில் பதிவு செய்வார்கள். இதில் முக்கியமான விஷயம் அந்த ஓட்டத்தில் சில தந்திரங்களை உபயோகப்படுத்துவார்கள், அதாவது மாடியிலிருந்து மாடி தாவுவது, சுவரில் சரசரவென பைப்பைப் பிடித்து ஏறுவது, புகைக் குண்டை வெடிக்கவைத்து மாயமாவது, போகும் வழியில் முட்களைக் கொட்டி துரத்துபவரிடமிருந்து தப்புவது எனப் பல. சில விஷயங்கள் வீடியோ தந்திரங்கள்தான் என்றாலும் இந்த வீடியோவை ரசிக்கவைக்கிறது இரு மாணவிகளின் சாகசங்கள். வீடியோ வெளியாகி ஐந்து நாட்களிலேயே மூன்று கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கின்றார்கள் என்றால் வைரல் வைப்ரேஷன் எப்படி எனப் பார்த்துக்கொள்ளுங்கள்!லிங்க்: http://youtu.be/qHFr1_md3Ok
2006-ம் வருஷ சர்வதேசக் கால்பந்து போட்டிக்காக பாப் பாடகி ஷகிரா ஆடின 'வக்கா வக்கா’ பாட்டே இன்னும் மனசைவிட்டு, ஏன் பல பேரோட மொபைலை விட்டுகூட போகாத நிலையில, இப்போ இந்த 2014-ம் வருஷ 'திமிதிகி’ கால்பந்துக்காக இவங்க வெளியிட்ட 'லா லா லா’ங்கிற பாட்டை ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. ரிலீஸ் பண்ணாலும் பண்ணாங்க... சும்மா 23 கோடிக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை க்ளிக்கியிருக்காங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் இந்த சர்வதேசக் கால்பந்து போட்டி முடிவுக்கு வந்துச்சு. இந்தக் கால்பந்து போட்டிகளோட நிறைவு விழாவில் ஷகிரா அக்கா இந்த 'லா லா லா’வை ஸ்டேஜ்ல ஏறி இடுப்பை வெட்டி வெட்டி ஆடியிருக்காங்க. சிகப்பு கலர் கட் கவுன்ல அம்மணியோட அழகுலேயும், அம்சமான குரல்லேயும் மயங்கிப் போய் அந்த வீடியோவை ஒரே வாரத்துல இப்போ வரைக்கும் சுமார் ஒரு கோடி பேர் பாத்துருக்காய்ங்க. வீடியோ வைரலாகி டாப் கியர்ல போய்ட்டு இருக்கு...ப்பா... என்ன பொண்ணுடா?
0 comments:
Post a Comment