Friday, 25 July 2014

ஓப்பன் பண்ணா ஸ்கூல் தான்!

ஓப்பன் பண்ணா ஸ்கூல் தான்!
பாரதிராஜா சினிமா பள்ளி ஆரம்பித்துவிட்டார். மற்ற இயக்குநர்களும் ஆரம்பித் தால்...

மணிரத்னம் அகாடமி:  இது ஒரு மௌனமொழிப் பள்ளினு சொல்லலாம்.  ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு ரயில் ஓடும். கண்டிப்பா எல்லாப் பசங்களும் தினமும் அந்த ரயில்ல ஒரு ரவுண்டு வரணும். அப்பப்போ இந்த ஸ்கூலில் மட்டும் மழை பெய்யும். ஆனால் லீவ் விட மாட்டாங்க. இங்கே வைக்கிற சாதாரண டெஸ்ட் ஆகட்டும் பப்ளிக் எக்ஸாம் ஆகட்டும் எல்லாமே ஒன் வேர்ட் ஆன்ஸர் கொஸ்டீன் தான். ரொம்ப அதிகமா வெளிச்சம் இல்லாத பள்ளிங்கிறதனால பவர் பிரச்னை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது இங்கே!
பார்த்திபன் பாடசாலை:  இங்கே எல்லாமே வித்தியாசமா இருக்கும். பண்டகசாலைனு போட்டு அதை அடிச்சுட்டு பாட சாலைனு நேம் போர்டுலேயே எழுதி இருக்கும். 'இங்கு களவும் கற்றுத் தரப்படும்’னு  பிரின்சிபால் ரூம்ல எழுதிப் போட்டிருப்பாங்க. ப்ராக்கெட்ல 'களவும் கற்று மறன்னு நம் முன்னோர்கள் சொன்னதைச் செய்றோம்’னு பிரின்ட் பண்ணி இருப்பாங்க. ஹோம் வொர்க்கை எல்லாம் ஒண்ணு கீழே ஒண்ணாவோ, கீழிருந்து மேலாகவோ மட்டும்தான் எழுதணும். பசங்க எந்தத் தப்பு பண்ணாலும், அதுக்கு புதுமையா ஒரு காரணம் சொன்னா, பரிசோட விடுமுறை தருவாங்க. கிஃப்ட் பேக்கிங் பற்றி ஸ்பெஷல் கோர்ஸ் ஃப்ரீ இங்கே. வடிவேலுனு பேர் இருக்கிற பசங்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும். அவ்வ்வ்வ்!
பாலா உறைவிடப் பள்ளி:  மொத்த ஸ்கூல் பில்டிங்கும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறைகிட்ட இருந்து வாடகைக்கு எடுத்ததுதான். இந்தப் பள்ளியில். அழுக்கா, அகோரமா, ஆண்டியா வந்தாதான் அட்மிஷனே கிடைக்கும். அம்மி கொத்துன மாதிரியோ, ஓவன்ல தலையை விட்ட மாதிரியோ, ஜடாமுனி ஸ்டைலிலோ மட்டும்தான் ஹேர் டிரெஸ்ஸிங்  இருக்கணும். ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படிஷன் எல்லாம் எந்த ரேஞ்சுல இருக்கும்னு பார்த்துக்கோங்க. மாணவர்களை அடிக்கக் கூடாதுங்கிற சட்டம் எல்லாம் இங்கே அமலாகாது. அடியாத மாடும் ஒடியாத கொம்பும் ஒண்ணுத்துக்கும் உதவாது.  இதுதான் இங்கே தாரக மந்திரம்!
கே. எஸ். ரவிகுமார் மெட்ரிகுலேஷன் பள்ளி:  இதுவும் ஒருவகை கிராமத்து ஸ்கூல்தான். இங்கே பிரின்சிபாலுக்கு பேரு நாட்டாமை.  பசங்க ஹோம் வொர்க் பண்ணலைனா கிளாஸை விட்டே தள்ளி வெச்சிடுவாங்க. தப்பு பண்ற பசங்களோட ஆரும் பென்சில், ரப்பர் பொழங்க முடியாது. கல்ச்சுரல்ஸ் நடந்தா கடைசியில் பிரின்சிபால் (அதாவது நாட்டாமை) வந்து கண்டிப்பா ஒரு டான்ஸ் பிட் போடுவார். அவ்ளோ ஏன்... டான்ஸ் ரிகர்சல்லகூட கடைசியில் வந்து ஆடுவார்!  
ஷங்கர் இன்டர்நேஷனல் ஸ்கூல்:  இது பிரமாண்டமான ஸ்கூல்னு அண்ட சராசரமே அறிந்ததுதான்.  ரோபோட்ஸ் எல்லாம் ஆயா வேலை பார்க்கும். இங்கே சூப்பர் கம்ப்யூட்டர்ஸ்தான் டீச்சர்ஸ். ஆனாலும் பசங்க ஃபெயில் ஆகிட்டா கம்ப்யூட்டருக்கே கண்ணு வேர்க்கும். திங்கள் ப்ரேயர் சாங்குக்கு பிரேசில் செட் போட்டு நடக்கும். செவ்வாய்க்கிழமை  டிஸ்னி லேண்டு, இப்படியே ஒவ்வொரு நாளும் நடக்கிறதனால பிள்ளைங்க அழாம ஸ்கூலுக்குக் கௌம்பும்.  இங்கே எஜுகேஷன் டூர் எல்லாம் செவ்வாய்க் கிரகம், நிலா, ஸ்பேஸ் ஸ்டேஷன் இந்த மாதிரி இடங்களுக்குத்தான். டெய்லி பெயின்டிங் காம்படிஷன் நடக்கும். குட்டிப் பசங்க எல்லாம் குஷியாகிடுவாங்க. என்ன, வாட்டர் பெயின்ட் வாங்கிக் கொடுத்தே பெத்தவங்க வாஷ் அவுட் ஆகிடுவாங்க. நீதி போதனைனு ஒரு வகுப்பே இப்போ கிடையாதுனு கல்வியாளர்கள் எல்லாம் புலம்புறாங்க. இங்கே அதுக்கு பஞ்சமே இருக்காது. எல்லா நீதி போதனைகளையும் செஞ்சு உங்களை சிவாஜியாவோ அன்னியனாவோ கண்டிப்பா மாத்திடுவாங்க.  உங்களைப் பத்தி உலகமே டி.வி-காரங்க  மைக்கை பிடுங்கிப் பேசும். பட் இங்கே படிக்க வைக்க, நீங்க உலக வங்கியில்தான் கடன் வாங்கணும்!
ஏ.ஆர். முருகதாஸ் வித்யாலயா: இது ஒரு சி.பி.எஸ்.சி ஸ்கூல். லைட்டா ஒரு நார்த் இண்டியன் எஃபெக்ட் இருக்கும். இங்கே தமிழ், இந்தி, ஆங்கிலம்னு மும்மொழி பாடத்திட்டம் அமலில் இருக்கும். பொதுவா ஞாபக மறதி ஒரு பெரிய பிரச்னை படிக்கிற பிள்ளைங்களுக்கு. ஆனா இந்த ஸ்கூல்ல அந்தப் பிரச்னையை ரொம்ப எளிமையா கையாளுவாங்க. எல்லா வகுப்புக்கும் ஒரு டாட்டூ ஆர்டிஸ்ட் இருப்பார். மறக்கிற அயிட்டங்களை அப்படியே உடம்பில் பச்சை குத்திடுவார்!  
மிஷ்கின் மிடில் ஸ்கூல்:  கூலிங் கிளாஸ் இல்லைனா நோ அட்மிஷன். சிலபஸ் படிக்கிறீங்களோ இல்லையோ, இத்தாலிய இலக்கியம், ரஷ்ய இலக்கணம், தென் அமெரிக்கக் கவிதைகள், ஆப்ரிக்க படைப்புகள் இப்படி உலகவாயனா கண்டிப்பா ஆகிடுவீங்க. இது ஒரு நைட் ஸ்கூல். பகல்ல நல்லாத் தூங்கிட்டு பாதி ராத்திரியில் பாடம் படிக்கணும். பேய் பிசாசெல்லாம் ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்கும். டீச்சர்ஸ் எல்லோருக்கும் மஞ்சள் கலர் யூனிஃபார்ம்.  நீங்களே இங்கே ஒட்டடை அடிக்கணும். பெஞ்ச் தூக்கணும். பல சமயங்கள்ல உங்களுக்கு நீங்களே பாடம் எடுத்துக் கணும். 'சீர்திருத்தப் பள்ளி’ மாதிரியே ஒரு ஃபீல் வந்தா, அது அப்படிதான்!

0 comments:

Post a Comment